ஆடித் தள்ளுபடியில் வீட்டு வசதி வாரிய வீடுகள் விற்பனை

முகப்பேர் ஏரிக்கரையில் 170 வீட்டுவசதி வாரிய வீடுகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி வீடுகளாக கட்டப்பட்டன. விற்பனை ஆகாமல் இருந்த இந்த வீடுகளை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக மாணவர்கள் விடுதியாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விற்காமல் கிடக்கும் இந்த வீடுகளை ஆடித் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
தற்போது இந்த பகுதியில் வீடுகள் விலை சதுர அடிக்கு ரூ. 3 ஆயிரம் ஆக உள்ளது. ஆனால் தள்ளுபடி விலையில் சதுர அடிக்கு ரூ. 980 என விற்க முடிவு செய்துள்ளது.
வீடுகள் முறையே 665 சதுர அடி மற்றும் 758 சதுர அடியில் கட்டப்பட்டவை. இதன் விலை ரூ. 6 லட்சத்து 19 ஆயிரம் முதல் ரூ. 7 லட்சத்து 4 ஆயிரம் வரை ஆகும்.
170 வீடுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 31 வீடுகளும், பழங்குடியினருக்கு 2 வீடுகளும், மாநில அரசு ஊழியர்களுக்கு 31 வீடுகளும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 வீடுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 12 வீடுகளும், முடிதிருத்து வோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 7 வீடு களும், 5 வீடுகள் பத்திரிகையாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
3 வீடுகள் வீட்டுவசதி வாரிய ஊழியர்களுக்கும், 63 வீடுகள் பொதுவானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப மனுக்கள் 6-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ. 110.
முகப்பேர் கிழக்கு, முகப்பேர் ஏரி, பெசன்ட் நகர், கே.கே.நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களிலும், சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் வங்கிகளிலும் விண்ணப்பங்கள் விற்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். செப்டம்பர் 31-ந் தேதி குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications