ரவுடி என்கெளன்டர்: போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: பிரபல ரவுடி பாபாசுரேஷ் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய காலதாமதம் செய்யும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பாபா சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு போலீஸாரால் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அவரது மனைவி தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல்ச ெய்தார்.
தனது கணவரை வேண்டும் என்றே போலீஸார் சுட்டுக் கொன்று விட்டதாக அவர் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆர்.கே. நகர் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், வயிற்றுவலி காரணமாக பாதிக்கப்பட்ட பாபா சுரேசை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது அவர் தப்பி சென்றுவிட்டார்.
தப்பி ஓடிய அவர் துறைமுகத்தில் பதுங்கி இருந்தார். அவரை பிடிக்க செல்லும்போது அவர் வெடிகுண்டுகளை வீசினார். இதனால் போலீசார் சுட்டதால் அவர் படுகாயம் அடைந்து மரணம் அடைந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள், பாபா சுரேஷின் பிரேதப் பரிசோதனையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டும் போலீஸார் தாக்கல் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே ஒரு வாரம் கொடுத்தாகி விட்டது. வியாழக்கிழமைக்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் கேஸ் டைரியையும் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications