மேடை நடனத்திற்குத் தடை: கண்டித்து கலைஞர்கள் உண்ணாவிரதம்
கடலூர்: விழாக்களில் நடைபெறும் மேடை நடனங்களில் ஆபாசம் பெருகிவிட்டதாக கூறி மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் தடை விதித்ததை எதிர்த்து கடலூரில் எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், வடிவேலு, குஷ்பு, சிம்ரன் வேடங்களில் நடனக் கலைஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இப்போதெல்லாம் மேடை நடனங்கள் இடம் பெறுவது வழக்கமாகி விட்டது.
பிரபல சினிமா கலைஞர்கள் வேடத்தில் நடனக் கலைஞர்கள் ஆடுவதால் சினிமா கலைஞர்களை நேரில் பார்த்ததைப் போன்ற திருப்தி மக்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் ஓரிரு இடங்களில் இதில் ஆபாசத்தைப் புகுத்தி விடுகிறார்கள். அரை குறை ஆடைகளுடன் பெண் கலைஞர்கள் நடனமாடுவதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை வந்தது.
இதையடுத்து இதுபோன்ற மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு தற்போது போலீஸார் தடை விதித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து கடலூர் மாவட்ட மேடை நடனக் கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே நூதன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், வடிவேலு, பாக்யராஜ், சிம்ரன், குஷ்பு உள்ளிட்ட பிரபலங்களின் வேடங்களுடன் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த அன்பு என்ற கலைஞர் கூறுகையில், போலீஸாரின் இந்தத் தடையால் எங்களது ஒட்டு மொத்த குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளோம்.
எங்களுக்கு தெரிந்தது இது ஒன்றுதான். இது எங்களின் வாழ்க்கை உயிர் நாடி. எங்கோ ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிக்கக் கூடாது.
தற்போது ஆடி மாதம். கோயில் விழாக்கள் நிறைய நடக்கிறது. எங்களுக்கும் கச்சேரிகள் நிறைய வருகிறது. ஆனால் போலீஸாரின் தடையால் எங்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் வருத்தத்துடன்.
புன்னகை சிந்தும் முகத்துடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் வேடமிட்டு நடனம் ஆடும் இந்தக் கலைஞர்கள், முகம் நிறைய சோகத்துடன், குறிப்பாக கவலை படர்ந்த முகத்துடன் இருந்த 'எம்.ஜி.ஆரைப்' பார்த்தபோது, காண வந்த மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது உண்மை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications