திருமணமாகாத பெண்களுக்கு முதியோர் பென்ஷன்
சென்னை: திருமணமாகாமல் 50 வயதை கடந்த ஏழைப் பெண்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.400 வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் கருணாநிதி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா பேசுகையில், தமிழக அரசு சார்பில் முதியோர், விதவைகள், கணவானால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், பல இடங்களில் திருமணம் ஆகாமலேயே முதிர் வயதை அடைந்த ஏழை பெண்கள் அரசின் விதிகளின்படி இத்தகைய உதவி தொகைகளை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரது இந்த ஆலோசனையை முதல்வர் கருணாநிதி பாராட்டி, அவருடைய பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து வாய்ப்பு வசதியற்று திருமணம் ஆகாமலேயே 50 வயதை கடந்த உழைத்து சம்பாதித்து வாழ்க்கை நடத்த இயலாத ஏழை, எளிய முதியோருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கப்படும் என்று மாநாட்டின் நிறைவு உரையாற்றும்போது அறிவித்து அரசாணையையும் முதல்வர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை, முதல்வர் கருணாநிதி இன்று காலை சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ள 9,100 ஏழை பெண்களுக்கு மாதம் ரூ. 400 வீதம் உதவித் தொகை வழங்கப்படும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications