நெல்லை கொண்டு செல்லப்பட்டார் அலி அப்துல்லா
சென்னை: தமிழகத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குத் திட்டமிட்ட தீவிரவாத தலைவர் அலி அப்துல்லாவை போலீஸார் விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆகஸ்ட் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் நெல்லையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பெரும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டினார் அலி அப்துல்லா. புழல் சிறையில் இருந்தபடியே இந்த சதி வேலையை அவர் திட்டமிட்டு வந்தார்.
இந்தத் திட்டத்தின் தளபதியாக நியமிக்கப்பட்ட நெல்லை பேட்டை அப்துல் கபூர் பிடிபட்டதன் மூலம் இந்த சதித்திட்டம் தெரியவந்தது.
இந்த நிலையில் அலி அப்துல்லாவை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீஸார் தீர்மானித்தனர்.
இதையுட்டு நெல்லை நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று மாலை அலி அப்துல்லாவை நெல்லைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்து போலீஸ் படை வந்தது. அவர்கள் நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் அலி அப்துல்லாவை புழல்சிறையிலிருந்து அழைத்துச் சென்றனர்.
சென்னை மாநகர எல்லை வரை சென்னை போலீஸார் பாதுகாப்புக்கு வந்தனர். அதேபோல வழியெங்கும் அந்தந்த மாவட்ட போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர்.
நெல்லை கொண்டு செல்லப்பட்டுள்ள அலி அப்துல்லாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications