கலெக்டர் அலுவலக இடிப்பு- வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு
சேலம்: நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் கலெக்டர் அலுவலக்தை இடித்த வழக்கில் 12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், மக்கள் குடியுரிமை சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தின் பொது செயலாளர் மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடிக்க கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் இடித்தனர்.
அதே போன்று சேலம், அங்கம்மாள் குடியிருப்பில் இருந்த 31 குடியிருப்புகளை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் இடித்து தள்ளினர். இதனால் அங்குள்ள மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை முறையாக செயல்படவில்லை. எனவே டிஜிபி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், டிஜிபி ஆகியோர் வருகிற12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications