மேலிட அழைப்பை நிராகரித்த ரங்கசாமி-நீக்கப்படுவாரா?
புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் நிலவரம் பெரும் கலவரமாகி வருகிறது. முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோரின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேச டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் விடுத்த அழைப்பை ரங்கசாமி நிராகரித்து விட்டாராம். இதனால் அவர் நீக்கப்புடவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரி சின்ன மாநிலமாக இருந்தாலும், எல்லா மாநிலங்களையும் போலவே, அங்கும் காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் மெகா சைஸில்தான் இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கட்சியில் பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவருக்கு எதிராக 5 அமைச்சர்கள்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இந்த பத்து பேரும் டெல்லியில் முகாமிட்டு ரங்கசாமியை நீக்க வேண்டும் என மேலிடத்ைத வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் சோனியா காந்தியை 2 நாட்களுக்கு முன்புசந்தித்தனர். அப்போது புதுச்சேரியில் அரசு செயலிழந்து கிடக்கிறது. முதல்வர் ரங்கசாமி யாரையும் மதிப்பதில்லை என்று சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களான வயலார் ரவி, அருண்குமார் ஆகியோருடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ரங்கசாமியை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. உடனே கிளம்பி வருமாறு அவருக்கு தகவல் போனது. ஆனால் ரங்கசாமி டெல்லிக்குப் போகவில்லை.
சோனியாவே கூப்பிட்டால்தான் போவது என்றமுடிவில் இருக்கிறாராம் ரங்கசாமி. மேலும் டெல்லியிலிருந்து ரவி, அருண்குமார் என பலரும் அவரை போனில் தொடர்புகொள்ள முயற்சித்தும் யார் பிடியிலும் சிக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறாராம்.
ரங்கசாமி ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று புதுவை அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முடிந்தால் நீக்கிக்கொள்ளட்டும், இனிமேல் இறங்கிப் போவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி மேலிடத்தை அவர் புறக்கணித்து வருவதாக தெரிகிறது.
மறுபக்கம், ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அமைச்சர்கள் தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர். ரங்கசாமியை மாற்றிய பிறகே புதுவை திரும்புவது என்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.
இதனால் ரங்கசாமி நீக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications