கூடியது ஐஏஇஏ-இந்திய அணு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்?

இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதற்கான சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் இன்று வியன்னாவில் தொடங்கியது.
35 நாடுகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்து எல் பராதே பேசுகையில், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்வகையில் இந்தியாவின் வரைவு ஒப்பந்தம் உள்ளது.
இந்தியாவின் தேவைகளை மட்டுமல்லாது அணு சக்தி ஏஜென்சியின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.
அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பான சிறந்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் 14 அணு உலைகள், ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். 2014ம் ஆண்டுக்குள் இவை ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்டும். இவற்றில் 6 அணு உலைகள் ஏற்கனவே அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
மற்ற அணு உலைகளில் ஏஜென்சியின் கண்காணிப்பு 2009ம் ஆண்டு முதல் தொடங்கும். இதுதொடர்பான நடவடிக்கைளை படிப்படியாக இந்தியா, ஏஜென்சிக்குத் தெரிவிக்கும். ஏஜென்சி தனது உறுப்பினர்களுக்கு இவற்றைத் தெரிவிக்கும்.
அடிஷனல் புரோட்டோகால் குறித்த விவாதங்களை ஏற்கனவே இந்தியாவும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும் தொடங்கி விட்டன என்றார் எல்பராதே.
இந்தியாவின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது. ஒப்பந்தத்திற்கு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா (இன்றுதான் தனது ஆதரவை ஆஸ்திரேலியா தெரிவித்தது), பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள வழங்கியுள்ளதால் ஒப்பந்தம் எந்தவித சிக்கலுமின்றி ஒப்புதல் பெற்று விடும் எனத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications