சென்னை விமான நிலையத்தில் பையால் பீதி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வெடிகுண்டு பீதி கிளம்பியதால் விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்நிலையில்உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இது புரளி என்று பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்றும் விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தின், காமராஜர் உள்நாட்டு முனையப் பகுதியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்காலமோ என்ற பீதி ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு டிபன் பாக்ஸும், ஒரு ஸ்வீட் பாக்ஸும் இருந்தது.
டிபன் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் எதுவும் இல்லை,காலியாக இருந்தது. இதையடுத்து அங்கு பதட்டம் தணிந்து நிம்மதி பிறந்தது. விசாரணையில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரின் பை அது என்று தெரியவந்தது.
மதிய உணவை சாப்பிட்ட அவர் பாத்ரூம் போவதற்காக பைக்குள் டிபான் பாக்ஸையும், ஸ்வீட் டப்பாவையும் வைத்து விட்டுப் போயுள்ளார். அவர் வருவதற்குள் இப்படி ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
பாத்ரூம் போய் விட்டு வந்த அவரை பாதுகாப்புப் படையினர் கடுமையாக எச்சரித்து பையைக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications