24 வார கால சிசு-அபார்ஷன் செய்ய அனுமதி மறுப்பு

மும்பையைச் சேர்ந்த நிகேதா மேத்தா மற்றும் ஹரேஷ் தம்பதியினர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், எங்களது குழந்தையின் இதயத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்ைத பிறந்த பின்னர் இதயக் கோளாறுடன் அவதிப்பட நேரிடும்.
எங்களால் எங்களது குழந்தை அவதிப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களது குழந்தையைப் பார்த்து எங்களது குடும்பத்தினர் அவதிப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
எங்களது குழந்தை தினசரி அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாது. எத்தனைதான் அரசும், பிறரும் எங்களது குழந்தைக்கு உதவி செய்தாலும் கூட அது குழந்தைக்கு எந்த வகையிலும் உபயோமாக இருக்காது.
மருத்துவ ரீதியிலான கருத்தடைச் சட்டத்தின் கீழ் 20 வாரங்களுக்குட்பட்ட சிசுவை மட்டுமே கருத்தடை மூலம் அழிக்க முடியும். அதற்கு மேற்பட்ட வாரத்திலான குழந்தை என்றால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருத்தடை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்த சட்டத்திலிருந்து எங்களுக்கு விதி விலக்கு அளித்து எங்களது குழந்தையை கருத்தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதுகுறித்து நிகேதா சிகிச்ைச பெற்று வரும் ஜேஜே மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ஜேஜே மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், குழந்தை இதயத் கோளாறுடன் பிறக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. அப்படியே பிறந்தாலும் பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டால் வழக்கமான வாழ்க்கையை அக்குழந்தையால் வாழ முடியும். பிறரின் உதவி தேவைப்படாமலேயே குழந்தை வாழ முடியும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேஸ்மேக்கர் கருவியை மாற்றினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பேஸ்மேக்கர் கருவிக்கு நிறைய செலவிட வேண்டியிருக்கும். அதை எங்களால் தாங்க முடியாது என்று நிகேதா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று நிகேதாவின் கோரிக்கையை நிராகரித்தது. குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்யவில்லை.
எனவே பெற்றோரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications