கரூர்.. தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்
கரூர்: கரூர் அருகே உள்ள மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ளது மேட்டு மகாதானபுரம். இங்கு புகழ்பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது பல காலமாக நடந்து வருகிறது.
இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய இந்த வழிபாடு நேற்று நடந்தது. தலையில் தேங்காய் உடைப்பதற்காக 515 பேர் ரசீது பெற்று கோவிலின் முன்பு வரிசையாக அமர்ந்திருந்தனர்.
சாமி அருள் வந்த பூசாரி பெரியசாமி ஒவ்வொரு தேங்காயாக எடுத்து வரிசையாக அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் ஓங்கி அடித்து உடைத்தார். அப்போது உடைந்து நொறுங்கிய தேங்காயை அங்கு திரண்டிருந்த பக்தர்கள் புனித பிரசாதமாக எடுத்து சென்றனர்.
அதன் பின்னர் கோவிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டது.
20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கக் கூடாது என்று குளித்தலை கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கோவில் நிர்வாகத்தினர் டோக்கன் வழங்கினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications