16ம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு
சென்னை: மதிமுக பொதுக்குழு 16ம் தேதி கூடுகிறது. இதில் புதிய அவைத் தலைவர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளுக்கு புதியவர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் நடத்தி வந்த மதிமுக செல்லாது, வைகோ தலைமையிலான மதிமுகதான் உண்மையான மதிமுக என தேர்தல் ஆணையம் சமீபத்தில்தீர்ப்பளித்தது. பம்பரம் சின்னமும் வைகோ மதிமுகவுக்கே சொந்தம் எனவும் அது கூறியிருந்தது.
இந்த சூழ்நிலையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ளது.
எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகமான தாயகத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோரை சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கியதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இருவரையும் எம்.பி. பதவியிலிருந்து நீக்க சபாநாயகரை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய அவைத் தலைவர் மற்றும் புதிய துணைப் பொதுச் செயலாளர்ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவைத் தலைவர் பதவியில் இதுவரை எல்.கணேசன் இருந்தார். செஞ்சி ராமச்சந்திரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.
அவைத் தலைவராக கண்ணப்பன் நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலவுகிறதாம்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications