பொதுத் தேர்தலிலும் ஜெயிப்போம்: ஜி.கே.வாசன்
நெல்லை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நெல்லையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டிற்கு தேவையான ஒன்றாகும். இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் அவசியமாகும். பாஜ, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்த போதிலும் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இந்த வெற்றி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். விலைவாசி உயர்வுக்கு சர்வதேச அளவிலான பொருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இருப்பினும் விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் ஐககிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடுகள் உள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள், அமைச்சர்கள் அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
சேது சமுத்திர திட்டம் தமிழக மக்களுடைய கனவு திட்டமாகும். இத்திட்டத்தில் மக்களுடைய கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications