சேலத்தில் குசேலன் பட பேனர்கள் கிழிப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் ரஜினியின் குசேலன் பட பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி பேசிய வார்த்தைகளுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

குசேலன் படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தையடுத்து கர்நாடகாவில் குசேலன் திரையிடப்பட்டது.

இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குசேலன் திரையிடப்பட்டு உள்ள தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள ரஜினியின் பேனர்களை சிலர் கிழித்து வருகின்றனர்.

சேலம் கீதாலயா, ராஜசபரி, ராஜேஸ்வரி ஆகிய தியேட்டர்கள் முன்பு ரஜினிகாந்த் மன்றத்தினர் பெரிய பேனர்களை வைத்து உள்ளனர். தியேட்டர்கள் அருகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை சில பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதையறிந்த ரஜினி மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+