முதல்வர் வருகை: மதுரையில் அகதிகளுக்கு தடை
மதுரை: மதுரையில் நடக்கும் 2 நாள் விழாக்களில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அகதிகள் முகாம்களை விட்டு வெளியே வர 6ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் முகாம்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் தங்கியபடி விடுதலைப்புலிகளுக்கு பொருட்கள் கடத்திய கிருஷ்ணநீதன் என்ற நிக்சனை (22), க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விடுதலைப் புலிகளி்ன் அரசியல் பிரிவு முக்கிய பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்தவர் கிருஷ்ணநீதன். அகதிகள் முகாமில் இருந்து கொண்டு விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் உள்பட பொருட்களை கடத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நாளையும், நாளை மறு தினமும் மதுரையில் நடக்கும் விழாக்களில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள முகாம்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் 5949 பேர் தங்கி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் வருகிற 2 நாட்களும் முகாம் களில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் உள்ள வாலிபர்களின் நடவடிக்கையை கியூ பிரிவு போலீசாரும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் முகாம்களில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications