ஜம்மு கலவரம்-2 போலீசார் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்முவில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இதில் 2 போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி மற்றும் ஓய்வறைகள் கட்டுவதற்காக காஷ்மீர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி அந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றது. இதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அங்கு பெரும் கலவரம் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜம்முவில் ஜோரியான் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தையும், ஜீப்பையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். கூட்டத்தை விரட்ட போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் 2 போலீசார் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்தேக் கொன்றனர். இதை பார்த்த மற்ற போலீசார் அங்கிருந்து ஓடினர். நிலைமைய சமாளிக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

சம்பா மாவட்டத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு தண்டவாளத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்த்தனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சதுரா மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்துக்கும், ரயில்வே போலீஸ் நிலையத்துக்கும் தீ வைக்கப்பட்டது.

அங்கு நடந்த மோதலில் 18 பேர் காயமடைந்தனர். அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து ஜம்மு உத்தம்பூரில் நேற்றஉ 3 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வுக் காண்பதற்காக பிரதமர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடக்கிறது. எல்லா தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆப்கன் பிரதமர் கர்சாய்க்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தின்போது, அமர்நாத் கோவில் நில விவகாரம் தொடர்பாக அத்வானியிடம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

கோவிலுக்கு நிலம் வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பையும் அழைத்து பேசுவது ஆகியவற்றை செய்தால் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அத்வானி யோசனைக் கூறியதாக தெரிகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+