இலங்கை இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்- சிபிஎம் கோரிக்கை
ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்து மீறலை கண்டித்து பாம்பனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாம்பனை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வருடம் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுமார் 42 பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களோடு 13 படகுகளும் பிடித்து செல்லப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர், கிறிஸ்டி, சந்தியாகு என்ற மூன்று மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவோம். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குடும்பத்தினர்ககு நாள் ஒன்றுக்கு ரூ.50 வழங்கி வந்தது. அந்த தொகை தற்போது ரூ.20ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை மீண்டும் ரூ.50 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நடக்கும் கட்சியின் மாநில குழுக் கூட்டதில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications