எனக்கு பேராசைப்படும் உரிமை உண்டு-கருணாநிதி
தூத்துக்குடி: சென்னை மாநகராட்சியில் சில குறைகள் ஏற்பட்டதற்காக அந்த மாநகராட்சியையே கலைத்தவன் நான். நெருங்கிய நண்பர்களை பிடித்து சிறையில் போட்டவன்தான் இந்த கருணாநிதி என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி தொடக்க விழா எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் நடந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகிக்க தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
புதிய மேயராக பொறுப்பேற்ற கஸ்தூரி தங்கத்திடம் மேயருக்கான் செங்கோலை வழங்கி கருணாநிதி பேசியதாவது:
தூத்துக்குடி வட்டாரத்தில் இன்று பெருவிழா. அமைச்சர்கள் ஸ்டாலின், கீதா ஜீவன் ஆகியோரின் வற்புறுத்தலால் மட்டும் இந்த விழாவுக்கு நான் வரவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியாவதை காணாமல் இருந்துவிடக்கூடாது என்ற ஆவலில் வந்துள்ளேன்.
திமுக கொடியை என் கரங்களால் நான் ஏற்றியது இந்த தூத்துக்குடியில்தான். 17.10.1949ல் அண்ணாவின் ஆணைக்கிணங்க கட்சியின் கிளையை தொடங்கி வைத்து கொடியை ஏற்றி வைத்தேன். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட கே.வி.கேவை மறக்க முடியுமா?
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ஆகியோரையும் மறக்க முடியுமா? இந்த விழாவுக்கு எத்தனை விமர்சனங்கள், எத்தனை தடைகள். (இந்த விழாவை எதிர்த்து அதிமுக வழக்கு போட்டது நினைவுகூறத்தக்கது)
ஒரு நகராட்சி மாநகராட்சியாக உயர்ந்தால், வளர்ந்தால் அதை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். தடை செய்ய முயற்சி செய்ய என்ன அவசியம் என்று யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு வீட்டில் பெண் பருவமடைந்தால் மங்கள நீராட்டு விழா நடத்துகிறார்கள். அது எதிர் வீட்டுக்காரருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதற்காக பெண் பருவமடையாமல் இருக்க முடியுமா?.
இந்த விழாவுக்கு ஏன் ஆடம்பர கூத்து, செலவு என்று நீதிமன்றம் சென்றுள்ளனர். தடை செய்ய சொல்பவர்கள் தங்கள் வீட்டு விழாவை, கட்சி விழாவை எளிமையாக நடத்தியவர்களா?.
24.8.1967ல் அப்போதைய முதல்வர் அண்ணாவுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தங்க செங்கோல் அவருக்கு பரிசளிக்கப்பட்டது. 16 முத்துக்கள் பொறித்த வரவேற்பு மலர் அளிக்கப்பட்டது. நகரில் 3 மைல் தொலைவுக்கு 50 அடிக்கு ஒன்று என்று மின் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அப்போது தூத்துக்குடி நகர்மன்ற தலைவராக இருந்தவர் பொன்னுசாமி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அப்போது விழாவை தடுக்க யாரும் முயலவில்லை. யாருடைய வயிறும் எரியவில்லை. நெஞ்சமும் படபடக்கவில்லை.
ஏனென்றால் அப்போது இருந்தவர்கள் நாகரீகம் தெரிந்தவர்கள். ஜனநாயகத்தை மதித்தவர்கள். காமராஜரிடம் பயின்றவர்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளராக இருந்த கஸ்தூரி தங்கம் இன்று தூத்துக்குடி மேயராகி இருக்கிறார்.
இப்படி அடிமட்ட பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தரும் ஒரே இயக்கம் திமுக தான். இந்த மகிழ்ச்சி கூடாதா? இந்த மகிழ்ச்சியை தெரியப்படுத்தும் மாண்புதான் இந்த விழா.
இது பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருக்கக் கூடாது. மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற செய்வோம் என்று அமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மாநகராட்சியின் தேவைக்கு ரூ.15 கோடி மானியம் கேட்டனர். தற்போது ரூ.5 கோடி வழங்கியுள்ளோம். மீதி பணத்தை பொது நிதியில் இருந்து எடுத்து செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாங்கியப் பணத்தை நல்ல முறையில் வழிமுறையோடு, மக்களுக்கு தேவையான வகையில் நேர்மையாக நாணயமாக செலவு செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் பணியாற்றும் காவலாளி முதற் கொண்டு மேயர் வரை யாராக இருந்தாலும் சரி நேர்மை நாணயத்தோடு செலவு செய்ய வேண்டும். நேர்மையான நிர்வாகத்தை நடத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். மீறி நடப்பவர்களை பொறுத்துக் கொள்பவன் நானல்ல.
சென்னை மாநகராட்சியில் சில குறைகள் ஏற்பட்ட என்பதற்காக அந்த மாநகராட்சியையே கலைத்தவன் நான். நெருங்கிய நண்பர்களை பிடித்து சிறையில் போட்டவன்தான் இந்த கருணாநிதி.
எனவே அனைவரும் நேர்மை தவறாமல், நாணயம் குறையாமல் செயல்பட வேண்டும். மாநகராட்சியின் புகழை மாண்பை கட்டிக்காக்க வேண்டும்.
தூத்துக்குடி மண்ணில் கால் வைக்கின்றபோது, இங்குள்ள மக்களை பார்க்கின்றபோது என்னுடைய சொந்த வீட்டிற்கு, பிறந்த மண்ணிற்கு வருவது போன்ற உணர்வை அன்றும் பெற்றேன். இன்றும் பெறுகிறேன். தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாகின்ற விழா, திருவாரூர் நகராட்சி மாநகராட்சியாகின்ற விழா என்ற உணர்வை பெறுகிறேன்.
இதை அமைச்சர் ஸ்டாலின் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். திருவாரூர் மாநகராட்சி ஆகின்ற வரை ஆட்சியில் நீடிக்க வேண்டும். உங்களுடைய நிர்வாகம் தொடர வேண்டும். அதை நானும் காண வேண்டும்.
இது ஆசை அல்ல. பேராசைதான். ஆனாலும் பேராசைப்பட எனக்கு உரிமை இருக்கிறது என்றார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications