சென்னை மர்மக் கொலைகளைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடந்த மர்மக் கொலைகளில் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாததைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த இந்தப் போராட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். வி.பி.கலைராஜன் முன்னிலையில் நடந்த போராட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், பிரமுகர்கள், பெரும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், காவல் துறைக்கும் எதிரான முழக்கங்களை அதிமுகவினர் எழுப்பினர்.
கொலையை சித்தரிக்கும் வகையில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பது போல ஒருவர் நடித்துக் காட்டியது அனைவரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications