ராஜா மீது மனித உரிமை கமிஷனில் தம்பதி புகார்

மேலும் ராஜாவின் ஆட்கள் மிரட்டுவார்கள் என்றும் பயமாக இருக்கிறது. இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். மாற்றுத் துணி கூட இல்லாமல் தவிக்கிறோம் என ராஜாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தம்பதி மனித உரிமை ஆணையத்திடம் புகார் தந்துள்ளது.
பழனிச்சாமி-மலர்விழி தம்பதியினர் அமைச்சர் ராஜா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரில், கடந்த 22ம் தேதி அமைச்சர் ராஜாவின் ஆட்கள் எங்களை கடத்திச் சென்று அடைத்து வைத்தனர். எங்களை மிரட்டி ரூ.20 கோடி மதிப்புள்ள இடத்தை எழுதி வாங்கினர். அந்த இடத்தில் இருந்த தென்னை மரங்கள், வீடுகள் ஆகியவற்றை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அங்கு மணல் கொட்டி பழைய இடமே தெரியாத அளவுக்கு மாற்றிவிட்டனர்.
நாங்கள் வளர்த்த கறவை மாடுகள், நாய்களை கொன்றுள்ளனர். என் பெற்றோர் எந்த ஆதரவுமின்றி தவித்து வருகின்றனர். எனவே அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வீட்டையும் இடித்து...
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், எங்களை கடத்தியது தொடர்பான தகவல்களை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த பின்பும் போலீசார் எங்களை விசாரிக்கவில்லை. அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அதனால்தான் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தோம்.
தற்போது அடையாறில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளோம். வரும் 12ம் தேதி வரைதான் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வீட்டையும் இடித்து விட்டனர். ஊருக்கு சென்றால் எங்கு தங்குவது என்று தெரியவில்லை.
ராஜாவின் ஆட்கள் மிரட்டுவார்கள் என்றும் பயமாக இருக்கிறது. இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். மாற்றுத் துணி கூட இல்லாமல் தவிக்கிறோம். அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறினர்.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications