பாளை வஉசி மைதானத்திற்கு குண்டு மிரட்டல்-போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வெடிகுண்டு மிரட்டல்களையடுத்து, சுதந்திரதின விழா நடைபெறவுள்ள பாளை வஉசி மைதானத்தில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நவீன கேமரா மூலமும் மைதானத்தின் சுற்றுப் பகுதிகளில் கண்காணிக்கப்படுகின்றன. சுதந்திர தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்பே வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், மேற்பார்வையில் 15 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 300 போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வஉசி மைதானத்தை சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தும் போலீசார் வீடியோ காமிரா மூலம் கண்காணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications