ஊட்டியில் ஹோமியோபதி மருந்தாலை-அன்புமணி உத்தரவு
ஊட்டி: ஊட்டியில் ஹோமியாபதி மருந்து ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக மக்கள் ஆங்கில மருத்துவ முறையை பெரும்பாலும் விரும்பினாலும், பக்க விளைவு இல்லாதது, பாராம்பரிய மருத்துவ முறை என்று கூறப்படும் ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் பல நாடுகளில் புகழ் பெற்று விளங்குகிறது.
ஜெர்மனி நாட்டு மருத்துவ முறையான ஹோமியோபதி மருத்துவ முறைக்கு முக்கிய தேவை நோய்களை குணப்படுத்தும் மூலிகை செடிகள் தான். மூலிகை செடிகள் மலைப் பிரதேங்களில் தான் செழித்து வளரும். ஆனால் அவைகளை கண்டறிந்து எடுத்து வருவது அவ்வளவு எளிது அல்ல.
இதனால் அரசு சார்பில், நீலகிரி மாவட்டம், ஊட்டி எமரால்டு பகுதியில் மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்து.
மத்திய அரசின் சுகாதாரத்துத்துறை சார்பில் கடந்த 1987 ம் ஆண்டு இந்த மூலிகைப் பண்ணைத் தொடங்கப்பட்டது.
இந்த பண்ணையில் மிக கொடிய நோய்களான, கண் நோயை குணப்படுத்தும் பிலரேரியா, ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் லியோனசு மூலிகை, மற்றும் மாரடைப்பை தடுக்கும் டிஜிடாலிசு மூலிகை, போன்ற உலக அளவில் பயன்படுத்தும் அரிய மூலிகைகள் சுமார் 100 க்கும் மேற்பட்டவை உள்ளன.
எங்கும் இல்லாத தட்பவெட்ப நிலை ஊட்டியில் மட்டும் நிலவுவதால் உலக கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்ட பல விதமான முக்கிய மூலிகை செடிகள் பக்குவமாக வளர்க்கப்பட்டு வருகிறது.
உலகில் எங்குமே கிடைக்காத அபூர்வ மூலிகை செடிகள் இருந்தும், மருந்து தயாரிக்கும் ஆலை இல்லாதாதல் அந்த மூலிகை செடிகள் பயனற்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில், ஊட்டி வெலிங்டனில் உள்ள மூலிகைப் பண்ணையில் ஹோமியோபதி மருந்து ஆலை அமைக்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ அறிவியல் கலந்தாய்வு குழுவினர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி, அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதன் விளைவாக, எமரால்டு பகுதியில் மூலிகை பண்ணை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதற்கு தேவையான நிதியையும் உடனடியாக ஒதுக்கும்படி ஆணையிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications