இறந்தவர் உடல்களை விரைவில் கொண்டு வர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: வெளிநாடுளில் வேலைக்குச் சென்று மரணமடையும் தமிழர்களின் உடல்களை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கிள்ளிஞ்சூர் ஒன்றிய திமுக இலக்கிய அணி புரவலர் பால் பிரபுல் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் மஸ்கட், சவுதி அரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடு களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் அங்கேயே இயற்கையாகவோ அல்லது விபத்துகள் மூலமாகவோ மரணம் அடைய நேரிடுகிறது.

இப்படி வெளிநாடுகளில் மரணம் அடையும் தொழிலாளர்களின் உடல் குமரி மாவட்டம் வந்து சேர பல வாரங்கள் ஆகின்றன. ஆண்டு தோறும் ஏராளமான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் தொழி லாளர்கள் மரணம் அடையும் போது உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் சடலம் வந்து சேர பல வாரங்கள் ஆகின்றன. இதனால் குடும்பத்தினர் இறந்தவருடைய உடல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் வரை உண்ணாமலும், உறங்காமலும், வேலைக்கு செல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார் கள்.

எனவே வெளிநாட்டில் இறப்பவர்களின் உடலை காலம் கடத்தாமல் உடனடியாக சொந்த ஊர் கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+