கபூர் வீட்டில் ரெய்ட்-முக்கிய செல்போன் எண்கள் சிக்கின!
{image-abdul gafoor250_08082008.jpg tamil.oneindia.com}திருநெல்வேலி: நெல்லை பேட்டையில் உள்ள அப்துல் கபூரின் வீட்டில் போலீஸார் நேற்று நள்ளிரவு முதல் இன்றுகாலை வரை அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய செல்போன் எண்கள் உள்ளிட்ட தடயங்கள் சிக்கியுள்ளன.
தமிழகத்தில் வெடிகுண்டுச் சம்பவங்களுக்குத் திட்டமிட்டிருந்த அப்துல் கபூர், அலி அப்துல்லா, ஹீரா உள்ளிட்டோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் 10 நாள் காவலில் போலீஸார் எடுத்து நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்குள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான வளாகத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று 8வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. 3 பேரையும் ஒன்றாக உட்கார வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அப்துல் கபூரின் பேட்டை இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர். இன்று காலை வரை ரெய்டு தொடர்ந்தது.
இந்த சோதனையின்போது சில முக்கிய செல்போன் எண்கள் உள்ளிட்ட தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செல்போன்களை வைத்து யார் கபூருக்கு பணம் கொடுத்தது, வெடிபொருட்களை வழங்கியது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் நம்புகின்றனர்.
இதே சமயத்தில், ஹீரா உள்ளிட்ட பிறரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications