தோட்டத்தில் பதுங்கி இருந்த 3 பேர் கைது-தீவிரவாதிகளா?

Subscribe to Oneindia Tamil

ஆழ்வார்குறிச்சி: கடையம் அருகே தோட்டத்தில் பதுங்கியிருந்த 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கடையம் சரகம் மீனாட்சிபுரம் (சிவசைலம் அருகே உள்ளது) ஒரு தோட்டத்தில் 3 பேர் கடந்த 3 நாட்களாக பதுங்கி இருப்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட தனிப்பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் படையினர் மீனாட்சிபுரத்திற்கு சென்று தோட்டத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து அம்பை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பிடிப்பட்ட 3 பேரின் பெயர்கள் வருமாறு:

1. அன்வர்
2. வினோத்
3. அனில்தாஸ்

இவர்கள் 3 பேரும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இவர்கள் நக்ஸல்களா அல்லது ஏதாவது தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+