இந்திய எல்லைக்குள் அத்துமீறல்-12 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்கள் அவ்வப்போது இரு நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெர்மல் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மணப்பாட்டிற்கு கிழக்கே 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் 5 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கடலோர காவல் படை கப்பல் வஜ்ரா மாலை கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து மணியில் மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியிலிருந்து கிழக்கே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு படகு நிற்பதை கண்டனர்.
அங்கு விரைந்து சென்று அதிலிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தனர். மேலும் 58 நாட்டிகல் தொலைவில் மற்றொரு படகு நிற்பதை கண்டு அதிலிருந்த 6 இலங்கை மீனவர்களையும் கைது செய்தனர். இவர்கள் 12 பேரும் தூத்துக்கடி கொண்டு வரப்படுகின்றனர்.
இன்று மாலை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications