அப்புறப்படுத்தப்பட்ட தலித்களுக்கு மீண்டும் வீடு: திருமா. கோரிக்கை
மதுரை: மதுரையில் அப்புறப்படுத்தப்பட்ட தலித் மக்களுக்கு மீண்டும் வீடுகள் வழங்க உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மேலவாசல் பகுதியில் சுமார் 150 தலித் குடும்பங்களின் குடிசைகளை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதற்காக கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை ஏழு மாதங்களாகியும் அந்த இடத்தில் கட்டுமானப் பணியை குடிசை மாற்று வாரியம் தொடங்காமலேயே வைத்துள்ளது.
அதற்குக் காரணமாக மதுரை மாநகராட்சியிடமிருந்து பெறப்பட்ட அந்த இடத்திற்கு மதுரை மாநகராட்சியால் இன்னும் கிரயம் நிர்ணயிக்கப்படவில்லை என்கிற காரணத்தைச் சொல்லி காலம் தாழ்த்தி வருவதாக தெரிய வருகிறது.
அரசு துறைகளான மாநகராட்சியும், குடிசைமாற்று வாரியமும் மெத்தனமாக இருந்து வருவதால், அங்கு குடியிருந்து வந்த 150 தலித் குடும்பங்கள் நகரிலிருந்து வெகு தூரத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினமாக உள்ளது.
எனவே, இந்த பிரச்சனையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு தலித் மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications