வெப்பமயமாக்கல் விழிப்புணர்வு 8 நிமிடம் விளக்கணைத்து பிரசாரம்
சென்னை: உலக வெப்பமயமாக்கல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு சரியாக 8 மணிக்கு விளக்குகளை அணைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சரியாக எட்டு மணிக்கு ஆரம்பித்து எட்டு நிமிடங்களுக்கு பல பகுதிகளில் விளக்குகளை அணைத்திருந்தனர். நேற்று ஆகஸ்ட் 8ம் தேதி என்பதால் 08-08-08 என்பதையொட்டி இந்த பிரசாரத்திற்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களிலும் விளக்குகளை அணைத்து பிரசாரத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையிலும் இந்த பிரசாரம் நடந்தது. எட்டு மணிக்கு ஆரம்பித்து எட்டு நிமிடங்கள், எட்டு விநாடிகளுக்கு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. ஆளுநர் பர்னாலாவின் உத்தரவுப்படி விளக்குகள் அணைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
திருச்சியிலும் ..
இதேபோல, திருச்சியிலும் நேற்று இரவு 8 மணிக்கு பெரும்பாலான பகுதிகளில் விளக்குகள் எட்டு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டன.
மாணவர்கள் பெருமளவில் இதில் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று இதுகுறித்து அவர்கள் பிரசாரமும் செய்திருந்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications