கன்னட செம்மொழி வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை: தமிழக அரசு
சென்னை: கன்னடத்தை செம்மொழியாக அறிவிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொது நலன் வழக்கில் தமிழக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு விளக்கியுள்ளது.
கன்னடத்தை செம்மொழியாக அறிவிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீல் ஒருவர் இதைத் தாக்கல் செய்துள்ளார்.
இது கர்நாடகாவில் பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளது. கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் நேற்று கர்நாடகத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தமிழக ரயில்கள் மறிக்கப்பட்டன. தமிழக லாரிகள் தாக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அரசுக்குத் தொடர்பு இருப்பதாக கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் அதை இன்று தமிழக அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவது தொடர்பாக பரிசீலிக்க குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் பொது நலன் வழக்கை தாக்க்ல செய்துள்ளார். இதற்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்ைல.
அந்த வழக்கறிஞருடனோ அல்லது அந்த வழக்குடனோ தமிழக அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை.
உண்மை இப்படி இருக்க, கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருப்பது செய்தி வருத்தத்திற்குரியது, கண்டித்தக்கத்து.
ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவது குறித்த முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். நிபுணர் குழுவின் அறிக்கைப்படி இந்த முடிவை மத்திய அரசு எடுக்கும். இதில் தமிழக அரசுக்கு எந்த வேலையும் இல்லை.
இந்த விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications