ஆந்திரா, மகாராஷ்டிரத்தில் கன மழை-கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்
விசாகப்பட்டிணம்&மும்பை: வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தம் வலுவிழக்கத் தொடங்கியுள்ளது என்றாலும் ஆந்திராவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அங்கு மேலும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை கடந்த 5ம் தேதி முதல் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காள விரிகுடாவின் வடமேற்கில் ஏற்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்தம் ஒரிஸ்ஸா மாநிலத்தின் கியோன்ஜர் மாவட்டம் உள்பட வடக்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் காற்றழுத்தம் வலுவிழக்கக் கூடும் என்று புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் ஆந்திராவில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துக்கு அங்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணா நதி படுகையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளிலும் பருவ மழை வலுவடைந்து, கன மழை பெய்து வருகிறது. மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications