ஆந்திராவில் தொடர்ந்து கன மழை-வெள்ள பலி 93 ஆனது
ஹைதராபாத்: ஆந்திராவில் கன மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குண்டூர் அருகே உள்ள ஓடை வெள்ளத்தில் சிக்கி லாரி ஒன்று கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 40 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதனால் ஆந்திராவில் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த 5ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
ஹைதராபாத் உள்பட ஆந்திராவின் வடக்கு கடற்கரை மற்றும் தெலுங்கானா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் இந்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
வெள்ளத்தில் சிக்கி 42 பேரும், வீடுகள் இடிந்து விழுந்ததில் 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். வீதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.
ஹைதராபாத்-விஜயவாடா மற்றும் பத்ராசலம்-விஜயவாடா பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள வம்சதாரா மற்றும் நாகவல்லி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் இந்த மழையில் நாசமடைந்துள்ளன.
லாரி கவிழ்ந்து..
இதற்கிடையில் குண்டூர்-அமராவதி சாலையில் லாரி ஒன்று 50 பேரை ஏற்றிக் கொண்டு சென்றது. நாருகுலாபாடு ஓடையில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிந்தது.
இதில் லாரி சிக்கி கவிழந்தது. லாரியில் பயணம் செய்த அனைவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 40 பேர் நீரில் மூழ்கி பரிதாகமாப இறந்தனர். அங்கு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் வெள்ளம், மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications