நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர் சாவு
சாட்னா (ம.பி.): தனது நாக்கை வெட்டி துர்கை அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தியவர் அடுத்த சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். மத்திய பிரதேசத்தில் இந்த பரிதாபமான சம்பவம் நடந்தது.
மத்திய பிரதேசம் சாட்னா மாவட்டம் நகோட் டெஹ்சில் பகுதியைச் சேர்ந்தவர் கன்ஷ்யாம் கோரி (45), டெய்லர். இவர் துர்கா தேவியின் தீவிர பக்தர். தெய்வ நம்பிக்கை காரணமாக துர்கா தேவி படத்தின் முன்பு தனது நாக்கை வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினார் கன்ஷ்யாம். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால், தெய்வத்தின் அருளால் தனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அவர்களை தடுத்துவிட்டார் கன்ஷ்யாம். இதையடுத்து அனைவரும் வழிபாடு செய்தனர். நான்கு மணிநேரம் ஆகியும் அங்கு எந்த அதிசயமும் நிகழவில்லை.
கன்ஷ்யாம் மயங்கியேக் கிடந்தார். தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றபோது அசைவற்றுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் கன்ஷ்யாமை நகோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், கன்ஷ்யாம் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications