வட மாநிலங்கள்-ராமேஸ்வரம் இடையே கூடுதலாக 3 ரயில்கள்
ராமேஸ்வரம்: வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதலாக மூன்று ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அனில் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அனில் சின்ஹா, ரயில்வே போக்குவரத்து போர்டு உறுப்பினர் மாத்தூர் ஆகியார் வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அனில் சின்ஹா கூறியதாவது:
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என்றும், அந்த ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில் பாதையின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பின்னர் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதலாக 3 ரயல்கள் இயக்கப்படும். மேலும் சென்னையில் இருந்தும் ரயில் கூடுதலாக இயக்கப்படும். வரும் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
