'கெடு டார்ச்சர்' சிபு சோரன் முதல்வராகிறார்!

சோரனுக்கு ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வர் கோடாவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மது கோடா முதல்வராக உள்ளார். சுயேச்சையான இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் சில சுயேச்சைகளின் ஆதரவுடன் முதல்வராக உள்ளார்.
3 வாரங்களுக்கு முன் மக்களவையில் மத்திய அரசி்ன் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது 5 எம்.பிக்களை கொண்ட சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு ஆதரவு தர நிபந்தனை விதித்தது.
தனக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்தார் சோரன்.
அதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதையடுத்து அவர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து அவரை அத்தோடு மறந்துவிட்டது காங்கிரஸ்.
ஆனால், தனக்கு உடனடியாக ஜார்க்கண்ட் முதல்வர் பதவி தர வேண்டும் என்று நச்சரித்து வந்தார் சிபு. அதை காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் இன்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து 24 மணி நேர கெடு விதித்தார்.
முதல்வர் பதவியை தராவிட்டால் ஜார்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என மிரட்டியுள்ளார். கூட்டணியில் இருந்து கழன்று, சில சுயேச்சைகளையும் வளைத்துக் கொண்டு, பாஜக கூட்டணியில் சேர்ந்தால் சிபுவால் அரசு அமைக்க முடியும்.
இதைத் தவிர்க்க லாலு முயன்று வருகிறார். அவருக்கு முதல்வர் பதவியை தருமாறு காங்கிரசுக்கு லாலுவும் நெருக்கடி தந்துள்ளார். அதே நேரத்தில் சுயேச்சைகளின் ஆதரவைப் பெற வேண்டியது சோரனின் பொறுப்பு என்றும் லாலு கூறிவிட்டார்.
இதையடுத்து மது கோடாவை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிபு எந்த நேரத்திலும் முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோடா சில சுயேச்சைகளைக் கூட்டிக் கொண்டு பாஜக பக்கம் போய்விடாமல் தடுக்க அவருக்கு முக்கியமான பதவி ஏதாவது தரப்படலாம் எனத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications