சிறுமியை கற்பழித்த முதியவர்: 10 ஆண்டு சிறை
மதுரை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்க மதுரை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரை மாவட்டம், சிலார்பட்டியை சேர்ந்த தம்பதி சிங்கராஜ்-மேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக சிங்கராசும், மேரியும் பிரிந்து வாழ்கின்றனர். மேரி தனது மூன்று குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்வருக்குச் சொந்தமான தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை செய்து வந்தார் மேரி. வேலைக்கு செல்லும்போது உதவியாக மகள் ஜாஸ்மினையும் (11) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அழைத்து செல்வார்.
பூப்பறிக்க தனியாகச் சென்ற ஜாஸ்மினை ராஜாமணி பல முறை பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார். இதுகுறித்து கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் மேரி புகார் தெரிவித்தார். போலீசார் ராஜாமாணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சித்தார்த்தர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. ராஜமாணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதை கேட்ட ராஜாமணி, தனக்கு வயதாகி விட்டதால் தண்டனை காலத்தை குறைக்கும்படி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications