போகாதீர்கள்: இடதுசாரிகளுக்கு கருணாநிதி கோரிக்கை

காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியில்இடம் பெற மாட்டோம். தமிழகத்திற்கும் இது பொருந்தும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளன. திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து வருகிற 25ம் தேதி இறுதி முடிவு எடுக்கப் போவதாக சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், திமுக கூட்டணியிலிருந்து இடதுசாரி கட்சிகள் விலக வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விலகக் கூடாது. அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
நாட்டின் நலனை முன்னிட்டு, அதைக் கருத்தில் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவையும் தோழர்கள் எடுத்து விடக் கூடாது. கூட்டணி தீபத்தின் ஜோதியை அணைத்து விடமுயலக் கூடாது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் அரசுக்கு மத்தியில் ஆதரவை விலக்கிக் கொண்ட இடதுசாரிகள், தமிழகத்தில் காங்கிரஸ் மீது எந்த கோபத்தையும் காட்டவில்லை.
மத்தியில் காங்கிரஸ் மீது உள்ள கோபத்தை, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மீது காட்டுவது நியாயமா. அங்கு எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்திற்கு பொருந்தாது.
இடதுசாரிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கும் உள்ள தொடர்பு நீண்டது, நெடியது.
யார் யாருடன் சேருவது என்பது இப்போது பிரச்சினை இல்லை. ஆனால், பாபர் மசூதியை இடித்த சக்திகள் மீண்டும் அதிகாரம் பெற்று விடக் கூடாது, உயிர் பெற்று விடக் கூடாது என்பதுதான் இப்போது முக்கியம்.
மதவாத சக்திகளை அடியோடு அழிக்கும் நோக்கில்தான் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி உருவாக்கப்பட்டது. இதை இடதுசாரி கட்சிகள் உணர வேண்டும்.
இப்போதுதான் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நேரம். அனைவரும் நமது கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications