ப்ளூ பிலிம் பார்த்தபடி ஜாலி: 4 பேர் கைது
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில், நடிகையின் ஆபாசப் படத்தை டிவியில் போட்டு பார்த்தபடி குடி போதையில் ஆட்டம், பாட்டம் போட்ட 3 சாப்ட்வேர் என்ஜீனியர்களை மற்றும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சுதந்திர தின விழாவ வருவதையொட்டி சென்னை நகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு அம்சமாக விடுதிகள், லாட்ஜுகள், மேன்ஷன்கள் உள்ளிட்டவற்றிலும் தினசரி ரெய்டு நடந்து வருகிறது.
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ்கள், மேன்ஷன்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அறைகளில் தங்கியிருப்போர் சரியான முகவரி கொடுத்துள்ளார்களா, அடையாள அட்டை கொடுத்துள்ளனரா என சரி பார்த்து வருகின்றனர்.
எத்தனை நாட்களாக தங்கியுள்ளனர், எதற்காக சென்னை வந்துள்ளனர், என்ன வேலை பார்க்கின்றனர் உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
அரூதிகான் பகதூர் தெருவில் உள்ள பசுபிக் மேன்ஷனில் போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் 3 வாலிபர்கள் சிறிய அளவிலான வீடியோவில் நடிகை நமீதாவைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் ஆபாசப் படத்தைப் போட்டு அதை ரசித்துப் பார்த்தபடி குடியும், கும்மாளமுமாக இருந்தனர்.
திடீரென போலீஸார் வந்ததைப் பார்த்த அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். போலீஸாருக்கும் அவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது.
விசாரணையில் அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த சாம்ராஜ் (29). மதுரை சிவக்குமார் (19), அசோக் நகர் ஸ்ரீதர் (27) என்பதும் சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயர்களாக இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அறையை சோதனையிட்ட போலீஸார் அங்கு நடிகைகளின் பெயர்களில் பலான பட சிடிக்கள் குவியல் குவியலாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர். 'திரி' நடிகையின் குளியல் காட்சி, குஷ்பு, நமீதா, சிம்ரன், மீனா போன்ற நடிகைகளின் பெயர்களில் இருந்த 57 ஆபாச சி.டி.க்கள் சிக்கின.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களுக்குப் பக்கத்து அறைக் கதவை தட்டி உள்ளே போனபோது, சத்யா என்ற வாலிபர், அவர் மட்டும் தனியாக அமர்ந்து ஆபாச சிடியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர் ஸ்டாக் வைத்திருந்த 7 சிடிக்களை பறிமுதல் செய்தனர்.
இப்படிப்பட்ட செயல்களுக்கு அனுமதி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட மேன்ஷன் நிர்வாகிகளை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications