எமிரேட்ஸ் இந்திய தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து
துபாய்: துபாய் மற்றும் ஐக்கிய எமிரேட்ஸில் உள்ள சில பகுதிகளில் தானியங்கி பெட்ரோல் நிலையங்களை எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் அமைக்கத் தொடங்கியுள்ளதால் அவற்றில் பணியாற்றும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் துபாயில் உள்ள 10 பெட்ரோல் நிலையங்களை தானியங்கி பங்குகளாக மாற்றியுள்ளது. இதனால் அங்கு ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வாகன தாரர்கள் தாங்களே பெட்ரோல், டீசல் போட்டுக் கொண்டு மெஷினில் பணத்தை செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல வடக்கு எமிரேட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளையும் தானியங்கி நிலையங்களாக மாற்றப் போகிறது எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம்.
இதனால் இந்த பெட்ரோல் பங்குகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற சுய சேவை பெட்ரோல் விற்பனை நிலையங்கள்தான் அதிகஅளவில் உள்ளன. அதே போன்ற முறையை இங்கும் அறிமுகப்படுத்துகிறோம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுய சேவை தானியங்கி பெட்ரோல் பங்குகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இருப்பினும் இந்த சுய சேவை எமிரேட்ஸ் மக்களுக்கு புதிது என்பதால் 2 மாதங்ளுக்கு எண்ணை நிறுவன ஊழியர்கள் பெட்ரோல் பங்குகளில் இருப்பார்கள். மக்களுக்கு இந்த சேவை பழகிய பின்னர் அவர்களும் அங்கிருந்து திரும்பப் பெறப்படுவார்கள்.
3 மாதங்களுக்கு இந்த சுய சேவை முறை சோதனை ரீதியாக அமல்படுத்தப்படும். அதன் பின்னர் எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுமாம்.
எண்ணை நிறுவனத்தின் இந்த புதிய முறையால் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications