மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு-குறைந்தபட்ச ஊதியம் ரூ10,000

Subscribe to Oneindia Tamil

Government of India
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த 6வது சம்பள கமிஷனின் அறிக்கைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி மத்திய அரசு ஊழியர்களி்ன் அடிப்படை ஊதியம் ரூ. 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களி்ன் குறைந்தபட்ச ஊதியம் இனி ரூ. 10,000 ஆக இருக்கும்.

ராணுவம், கடற்படை, விமானப் படை, பாதுகாப்புப் படைகள், ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட 6வது சம்பள கமிஷன் சில மாதங்களுக்கு முன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

ஆனால், அதில் கூறப்பட்ட ஊதிய உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்ததால், குறிப்பாக ராணுவத்துறை, அது குறித்து ஆராய மத்திய கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவும் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்பித்தது.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், ஊதியக் குழு மற்றும் கே.எம்.சந்திரசேகர் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 6வது சம்பள கமிஷனின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களி்ன் அடிப்படை ஊதியம் ரூ. 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களி்ன் குறைந்தபட்ச ஊதியம் இனி ரூ. 11,000 ஆக இருக்கும்.

இந்த ஊதிய உயர்வு 2006ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் அளவி்ல் அரியர்ஸ் (நிலுவைத் தொகை) கிடைக்கவுள்ளது.

இந்தத் தொகை இரு கட்டங்களில் தரப்படும். இந்த ஆண்டு 40 சதவீதம் பணமாகவும், அடுத்த ஆண்டு 60 மீதத் தொகை பணமாகவே தரப்படும்.

பாதுகாப்புத்துறையினரைப் பொறுத்தவரை அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 பதவி உயர்வுகள் வழங்கப்படும். மேலும் மத்திய அரசு ஊழியர்களை விட அவர்களுக்கு ஊதிய உயர்வும், படிகளும் கூடுதலாகவே தரப்பட்டுள்ளன.

கலோனல்கள், பிரிகேடியர்கள் ஆகியோர் உயர்பட்ச ஊதிய விகிதத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த ஊதிய உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ. 6,400 கூடுதல் செலவாகும்.

இந்த ஊதிய உயர்வால் 54 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பலனடையவுள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரையால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 17,800 கோடி செலவு பிடிக்கும்.

அரியர்ஸ் உள்ளிட்ட தொகைகளை வழங்க மேலும் ரூ. 55,000 கோடி செலவாகும்.

சம்பளக் கமிஷன் கூறியதைவிட மத்திய அரசு ரூ. 11,000 கோடி அளவுக்கு கூடுதலாக ஊதியத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+