கர்நாடகம்: ஸ்கூல் பஸ் ஆற்றில் விழுந்து 11 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil

இதில் மேலும் பல குழந்தைகளும் பலியாயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை மங்களூர் நகரில் உள்ள கைகம்பா பகுதியில் சென்ற இந்த பள்ளிக் குழந்தைகளின் பேருந்து, ஆற்றில் குறுக்கே உள்ள பாலத்தை கடக்க முயன்றது. அப்போது பாலத்தின் மீதும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
பாலத்தை கடந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட பஸ்சின் டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றுக்குள் விழுந்தது.
குழந்தைகள் தவிர டிரைவரும், ஒரு உதவியாளரும் அந்த பஸ்சில் இருந்தனர். அவர்கள் இருவரும் நீந்தி கரையேறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications