பழிவாங்கும் தமிழக போலீஸ்-இளைஞர் காங். புகார்
கோவை: தங்களை பழிவாங்குவதாக போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார்.
இதுகுறித்து கோவையில் அவர் கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி இருசக்கர வாகன பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டோம். கோவையில் எனது தலைமையில் இந்த பேரணி நடப்பதாக இருந்தது. இதுகுறித்து காவல் துறையினருக்கு பத்து நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரி மனு கொடுத்திருந்தோம்.
காவல் துறையினரும் பேரணிக்கு அனுமதி அளித்தனர்.
ஆனால் திடீரென்று பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது, பேரணி நடத்தக் கூடாது என்று கூறுகின்றனர். இருசக்கர பேரணி நடத்த முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, நடந்து சென்று, மத்திய அரசின் சாதனை விளக்க பேரணியை நடத்தவாவது அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் அதற்கும் காவல் துறையினர் மறுத்து விட்டனர்.
அதையும் மீறி இளைஞர் காங்கிரசார் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பேரணியாக புறப்பட முயன்றபோது என்னையும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். தனிப்பட்ட முறையில் இளைஞர் காங்கிரசார் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்று அவர் புகார் கூறினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications