சிஐடியூ தலைவரை தாக்கிய டிஎஸ்பி- சிபிஎம் கண்டனம்
சென்னை: கடலூர் மாவட்ட சிஐடியூ தலைவர் சுகுமாரன் என்பவரை கண்மூடித்தனம தாக்கி, அவரது கண் பார்வை பறிபோகும் வகையில் கொடூரமாக நடந்து கொண்ட கடலூர் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுகுமாறன் தலைமையில் கடந்த 11ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பேக்டரி முன்பு பல்வேறு கோரிக்ைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது டி.எஸ்.பி. ஸ்டீபன் யேசுபாதம் என்பவரது தலைமையில் வந்த போலீஸார் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். கண்மூடித்தனமாக தொழிலாளர்களைத் தாக்கியுள்ளனர். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் தடியடி நடத்தியதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
இதில், தொழிற் சங்கத் தலைவர் சுகுமாறன் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வலது கண்ணில் கடும் காயம் ஏற்பட்டு பார்வையை இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்துக்குரியது. நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். டி.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.
தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல்நடந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications