ராஜா வழக்கு-3 பேருக்கான ஜாமீனை ரத்து செய்ய பழனிச்சாமி கோரிக்கை
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் 3 பேருக்கு அளிக்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, அவர்களது மகன் சிவபாலன் ஆகியோரை அமைச்சர் ராஜா ஆட்களை வைத்துக் கடத்தி, சொத்தைக்கேட்டு மிரட்டியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக பழனிச்சாமியின் மருமகனான இளங்கோவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராஜா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சுந்தரராஜன், சம்பத்குமார், சுந்தரம் ஆகிய 3 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கும் முன்ஜாமீன் அளித்தது.
இந்தச் சூழ்நிலையில் இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனது நிலத்தை அபகரிக்க முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தூண்டுதலின் பேரில் அவருடைய ஆட்கள் என்னையும், என் மனைவி, மகன் ஆகியோரையும் கடத்திச் சென்றனர்.
இந்த வழக்கில் சுந்தரராஜன், சம்பத்குமார், சுந்தரம் ஆகிய 3 பேர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications