தூத்துக்குடி: ரூ.75 லட்ச மின்சாரம் திருடிய ஆலை!
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் ரூ. 75 லட்சம் அளவுக்கு மின்சாரம் திருடப்பட்டுள்ளதை மதுரை மின் திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரத்தில் பெரோ சிலிக்கான் கால்சியம் கார்பைட் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு 350 சிவிஏ மின் இணைப்பை மின் வாரியம் கொடுத்தது.
ஆனால், மின் இணைப்பு மூலம் மின்சாரம் பயன்படுத்தாமல் மின்சாரம் திருடப்படுவதாக மின் திருட்டு கண்காணிப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து மதுரை மின் திருட்டு கண்காணிப்பு செயற்பொறியாளர் (பொறுப்பு) அழகப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அதிரடியாக அந்த ஆலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது மெயின் பாக்ஸ் மூலம் மின்சாரம் திருடுப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஒட்டப்பிடாரம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அந்த ஆலை நிர்வாகி மற்றும் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications