திருச்சி: ரூ1 லட்சம் லாட்டரி பறிமுதல்-இருவர் கைது
திருச்சி: ஈரோட்டில் இருந்து வேனில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் காவிரிக்கரை செக்போஸ்டில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது.
இதையடுத்து அந்த லாட்டரி சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். வேனில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம், வெள்ளசம்பட்டியை சேர்ந்த ஜெய்கணேஷ் (32), மாவட்டம் பெரியவலசையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (33) என்பதும் தெரிய வந்தது.
மேலும் லாட்டரி சீட்டுகள் ஈரோட்டில் இருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெட்டி கடை நடத்தும் துரைசாமி மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு கொடுப்பதற்காக லாட்டரிச் சீட்டுகளை கொண்டு வந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications