நாட்டின் இப்போதைய தேவை அமைதி: பிரதீபா
டெல்லி: நாட்டில் இன்றைய தேவை அமைதிதான். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
62வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலமும், ஒத்துழைப்புடன் திகழ்வதன் மூலமும் இப்பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்.
இதன் மூலம் வலிமையான, வலுவான, பொருளாதார சக்தியாக திகழும் இந்தியாவை உருவாக்க முடியும்.
எந்தப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு நிச்சயம் உண்டு. திறந்த மனதுடன், சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
மற்றவர்களின் கருத்துக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நமது கருத்தை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பதைப் போல நாமும் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்குக் காரணம், சட்டத்ைத நாம் கையில் எடுத்துக்கொள்வதுதான். அந்தப் போக்கு நீங்க வேண்டும். எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை முடிவாகாது.
எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். தேசிய வேள்வியாக இதை கருதி நாம் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications