சுதந்திர தினம்-வளைகுடாவில் உற்சாக கொண்டாட்டம்
துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தினம் இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் மிகுந்த உற்சாகத்துடன் துபாய் இந்தியப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இந்திய தேசியச் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் உரையைப் படித்தார்.
இந்த உற்சாக நிகழ்வில் ஈமான், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், பல்வேறு நிறுவன ஊழியர்களும், தொழிலாளர்களும் பங்கேற்றனர். மேலும் பள்ளிக்குழைந்தைகளின் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அபுதாபியில்...
இதேபோல அபுதாபி இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மது இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் உரையினை வாசித்தார்.
பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகள், இந்திய நிறுவன பிரதிநிதிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற பகுதிகளான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, புஜைரா, கல்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள இந்திய சங்கத்திலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications