சுதந்திர தினம்: போராட்டம்-தியாகி மனைவி கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய தியாகியின் மனைவி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுக்கா ஆப்பனூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
தியாகி பென்சனையும், அதற்கான சலுகைகளையும், இவரது மனைவி ராமாத்தாள் பெற்று வருகிறார்.
கடந்த 2005 ம் ஆண்டு ராமாத்தாளுக்கு 3 செண்ட் புறம் போக்கு நிலம் அரசால் வழங்கப்பட்டது. இதற்கு உரிய பட்டாவும், வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ராமாத்தாளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நாடாளுமன்ற தொகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திடீரென ஊரணி வெட்டப்பட்டது.
இது குறித்து ராமாத்தாள் அதிகாரிகளிடம் பல முறை நேரிலும், தபால் மூலம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ராமாத்தாளும், அவரது மகன் கணேசனும் கறுப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
இது குறித்து ஆப்பனூர் விஏஓ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற ராமாத்தாளையும் அவரது மகன் கணேசனையும் கைது செய்தனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications