மதிமுக பொதுக்குழு: செஞ்சி-எல்ஜிக்கு கண்டனம்
சென்னை: மதிமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது. இன்னிசைக் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இக்கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணா நகரில் உள்ள விஜயஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு முன்பாக இன்னிசைக் கச்சேரி நடந்தது. பின்னர் கூட்டத்தில், புதிய அவைத் தலைவராக கண்ணப்பன், பொருளாளராக மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளராக துரை. பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யபப்பட்டதற்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து 3 பேருக்கும் வைகோ பொன்னாடை போர்த்தி வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர் பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசத் தொடங்கினர். அரசியல் விவாதங்களும் நடந்தன.
கூட்டத்தில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு பின்னர் நீக்கப்பட்ட செஞ்சி ராமச்சந்திரன்,எல்.கணேசன் ஆகியோரை கடுமையாக சாடி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
புதிய அவைத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒப்புதல், பாராட்டு, எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கு கண்டனம், அரசியல் நிலவரம், கட்சி செயல்பாடு, கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.தி.மு.க. பொதுக்குழு முடிவு மற்றும் தீர்மான விவரங்களை வைகோ இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த வைகோவுக்கு மதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications