போலீஸ் தாக்குதலில் 30 ஆப்கன் தலிபான் தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கனில் போலீஸார் நடத்திய தாக்குதலில் 30 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெஸ்மண்ட் பகுதியின் நாட்அலி மாவட்டத்தின் செக்போஸ்ட் பகுதியில் போலீஸார் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
போலீஸார் தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு பகுதியில் நடந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர்.
இந்தாண்டு மட்டும் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையை நடந்த மோதலில் 3,200 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications